அன்பே தவம்

அன்பே தவம்

பிறர் துன்பங்களை கேட்டபோதே மனம் கசிய வேண்டும். பசுங்கன்று அம்மா என்று அழைத்தால், தன்னை அழைத்தது போன்ற உணர்வு வந்தது என்கிறார் மகான் இராமலிங்கசுவாமிகள். ஒரு கன்று தன்னுடைய தாயை அழைப்பதை, இவரை அழைத்தது போன்று ஒரு உணர்வு ஆசான் ஞானபண்டிதனான சுப்பிரமணியரை வணங்கியதால் அப்படிப்பட்ட தயைசிந்தை வந்தது. தயைசிந்தை உள்ளவன்தான் தன்னை அர்ப்பணிப்பான். தன்னை அர்ப்பணிப்பவனே புண்ணியத்தை பெறுவான். புண்ணியத்தை பெறுகின்றவன் ஞான வீட்டை அடைகின்றான். ஆக மரணமில்லாப் பெருவாழ்விற்கு அடிப்படை அன்பு. அதுவே தவம்.

Share on:
Today News