அறிந்தவருக்கு இந்த தேகம்

அறிந்தவருக்கு இந்த தேகம்

அமிழ்தமாகவும், ஆலயமாகவும் இருக்கிறது. அறியாதவனுக்கு இந்த தேகம் நரகமாக இருக்கிறது. எல்லாம்வல்ல இயற்கையின் துணை கொண்டே ஞானிகள் கடவுள் தன்மையை அடைந்தார்கள். கடவுளை அடைவதற்கு தனித்தன்மை கிடையாது, தனிப்பொருள் என்ற ஒன்று அங்கே கிடையாது. இதே இயற்கை, இதே உணவு, இதே உடற்கூறு, மூச்சுக்காற்றுதான் இயங்கிக் கொண்டுள்ளது. ஆனால் இதே இயற்கையை கொண்டு ஞானிகள் கடவுள் ஆகிறார்கள். ஞானிகள் உடம்பே ஆலயமாக மாறியதால் பேரின்பத்தை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மைகளையும், இயற்கையையும் அறியாமல் நாம் மாண்டு போகிறோம். உள்ளமே பெருங்கோவில்! ஊனுடம்பே ஆலயம்!!

Share on:
Today News