ஆசான் சுப்பிரமணியர்

ஆசான் சுப்பிரமணியர்

ஆசான் சுப்பிரமணியர் மிகப்பெரிய புண்ணியவான். இயற்கையிலேயே நல்ல அருவி உள்ள ஒரு பக்குவமான இடத்திலே ஆசான் தோன்றி எந்த தீமையும் செய்யாது, ஜீவதயவை மையமாக கொண்டு இருந்ததனால்தான் அவருடைய சிந்தை உயர்ந்திருந்தது. நல்ல நுட்பமான அறிவு வருவதற்கு காரணம் நல்ல சிந்தனை. இந்த சிந்தனைதான் இயற்கையைப் பற்றி அறியக்கூடிய அறிவைத் தந்தது. இப்படி இயற்கையைப் பற்றி அறியும்போது, ஓடுகின்ற காற்றை நிறுத்தி வைத்தார். அப்படி நிறுத்திய அந்தக் காற்றை நிறுத்திய இடத்தில் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்தக் காற்று புருவமத்தியில் ஒடுங்கியது. அப்படி ஒடுங்கியதன் காரணமாக எல்லாம்வல்ல இயற்கை ஆசான் சுப்பிரமணியருள் செயல்பட ஆரம்பித்துவிட்டது. எல்லாம்வல்ல இயற்கை செயல்பட ஆரம்பித்தது, மனம் செம்மையானது, ஆன்மாவை அறிந்தார். பின்பு கடவுளானார்.

Share on:
Today News