இல்லறத்திற்கு ஞானிகள் மட்டுமே துணை

இல்லறத்திற்கு ஞானிகள் மட்டுமே துணை

இல்லறத்திற்கு ஞானிகள் மட்டுமே துணை. ஞானிகள் வழிபாடே இல்லறத்தை உயர்த்தும். நிலையில்லாத பொருளை நிலையான பொருளாக்குவதற்கு இல்லறமே துணை. இல்லறமல்லது நல்லறமன்று. மனைவி, மக்களோடு இருந்தே கடவுளை அடையலாம். இல்லறமே அறம் செய்யவும், விருந்தை உபசரிக்கவும் துணையாக இருக்கும்.
கடவுளை தேடி எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. இல்லறத்திலிருந்து கொண்டே ஞானிகளை வணங்கி பூஜை செய்து, மனைவி மக்களோடு தர்மம் செய்து நம்மை நிலைஉயர்த்திக் கொள்வோம்.

கடனின்றி வாழ, நோயின்றி வாழ, குடும்ப ஒற்றுமையோடு வாழ, அறம் செய்து வாழ, விருந்தை உபசரிக்க, பண்புள்ள குழந்தைகளோடு வாழ, அறவழியில் பொருளீட்ட ஞானிகள் வழிபாடே துணை.
ஆகவே ஞானிகளை வணங்குவோம், ஆசி பெறுவோம்…..

Share on:
Today News