காயமே இது பொய்யடா

காயமே இது பொய்யடா

ஓம் ஆறுமுக அரங்க மகா தேசிகாய நமக….
காயமே இது பொய்யடா –
நம்முடைய இந்த உடம்பை காயம் என்று சொல்வார்கள். காயமே இது பொய்யடா என்று சொல்லிவிட்டார்கள். காயம் பொய்யென்றால் எங்கோ ஒரு உண்மை இருக்க வேண்டுமல்லவா? அந்த உண்மை இந்த உடம்பில்தான் இருக்கிறது.
ஞானிகளெல்லாம் இந்த பொய்யான உடம்பில் உண்மையை கண்டவர்கள். இதை பொய்யாகிய உடம்பிற்குள் மெய்யை காண்பது என்று அர்த்தம்.
பொய் எது? மெய் எது? புறஉடம்பு பொய். உள்ளுடம்பு மெய். தலைவன் ஆசியிருந்தால்தான் பொய்யை மெய்யாக்கிக் கொள்ள முடியும். ஆக காணக்கூடிய புற உடம்பிற்குள் சூட்சும தேகம் இருக்கிறது. சூட்சும தேகத்தை அறியும் வரையில் காயமே இது பொய்யடா. இதை அறிவதற்கு ஞானிகள் ஆசி இருக்க வேண்டும். ஞானிகளை வணங்க வேண்டும்.

Share on:
Today News