குடமுழுக்கு விழா

குடமுழுக்கு விழா

ஒரு மனிதன் முன்னேற வேண்டுமென்றால், புலால் மறுக்க வேண்டும். உயிர்க்கொலை செய்யாதிருக்க வேண்டும். காலை, மாலை தியானம் செய்ய வேண்டும். மாதம் ஒருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பிறரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தயை சிந்தைதான் ஒரு மனிதனை கடவுளாக்கும். தயை சிந்தை உள்ளவன் லோபியாக இருக்க முடியாது. தயை சிந்தை உள்ளவன் புலால் உண்ண மாட்டான். தயை சிந்தை உள்ளவன் ஜாதி வித்தியாசம் பேச மாட்டான். அவன் பிறரை மதிக்கக் கற்றுக் கொள்வான். தயை சிந்தை உள்ளவன், இரக்க சிந்தை உள்ளவன், அன்பு உணர்ச்சி உள்ளவன், கண்ணோட்டம் உள்ளவன் ஆக இவர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பேச்சு, செயல் எல்லாம் தூய்மையானதாக இருக்கும்.

Share on:
Today News