சொர்க்க வாசல்

சொர்க்க வாசல்

சொர்க்க வாசல் என்பது புருவமத்தி அல்லது சுழிமுனை எனப்படும். சுழிமுனைக்கதவை திறந்தால் உள்ளே ஜோதி தோன்றும். அது சொல்லவொண்ணா பேரானந்தத்தை தரவல்லது. யோகிகள்தான் அந்த சொர்க்க வாசலை பார்க்கலாம். இடகலையும் பின்கலையும் ஒன்றுபட்ட இடம் புருவமத்தி. இடகலையை அகாரமென்றும், பிங்கலையை உகாரமென்றும் அழைக்கப்படும். தமிழ் எண்களில் அ என்பது 8ஐ குறிக்கும். உ என்பது 2ஐ குறிக்கும். தசம் என்றால் பத்து. ஏகம் என்றால் ஒன்று என்று அர்த்தம். எட்டிரண்டும் சேர்த்து என்பார் ஞானிகள். எட்டையும் இரண்டையும் சேர்த்தால் பத்து. மார்கழி மாதம் ஏகாதாசி அன்று விஷ்ணுபகவானுக்கு புருவபூட்டு திறக்கப்பட்டது. அதாவது புருவமத்தியாகிய புருவப்பூட்டு திறந்து ஜோதியைப் பார்த்தார். அதனால் ஏகாதசி அன்று சொர்க்க வாசலை பார்க்கிறார்கள். இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்காக யோகிகள் இப்படி அமைத்து கொடுத்திருக்கிறார்கள். நாமும் ஞானிகளை வணங்கி ஆசி பெற்று சொர்க்கவாசலைப் பற்றி அறிவோம்.

Share on:
Today News