சோம்பல் ஆகாது – 1

சோம்பல் ஆகாது – 1

ஞானிகள் நாமத்தை சொல்ல சொல்ல நாம் வீண் பொழுது போக்குவது தவறு என்று உணருகின்ற அறிவு வரும். ஒருவன் டிவி பார்த்துக் கொண்டோ அல்லது நான்கு பேருடன் வீண் பேச்சு பேசிக் கொண்டிருப்பான். என்னடா வீண் பேச்சு பேசிக் கொண்டிருக்கிறாய், கருமம் பிடித்தவனே இப்படி யார் சொல்வார்கள். மகான் இராமலிங்க சுவாமிகள், மகான் மாணிக்கவாசகர் போன்ற ஞானிகள்தான் சொல்வார்கள். அரை மணி நேரம் உட்கார்ந்து தியானம் செய்தாயா? தியானம் செய்யாவிட்டால் பிறவி வந்துவிடுமே என்ன செய்வாய்? என்றெல்லாம் மனது சொல்லும். இப்படி சொல்லுவதற்கு இதயத்தில் வந்து ஞானிகள் உணர்த்த வேண்டும். இப்படி சொல்லவில்லை என்றால் இவன் காலத்தை வீணாக்கிக் கொண்டே இருப்பான். சைவத்தை மேற்கொண்டு உயிர்க்கொலை தவிர்த்து புலால் உண்ணாமல் இருக்கும் புண்ணியவான்களுக்குத்தான் ஞானிகள் அருள் செய்வார்கள்.

Share on:
Today News