ஞானத்தலைவன் முருகன்

ஞானத்தலைவன் முருகன்

ஞானத்தலைவன் முருகன் அருளும், துணையும் கூடினாலன்றி ஞானம் அடைவது இயலாதென்றும், ஒருவன் வாழ்வினிலே நோயின்றி ஆரோக்கியமாகவும் எந்த பிரச்சனையின்றியும் வாழ வேண்டுமாயினும் அவனுக்கு முருகன் அருள் இருந்தால்தான் முடியும் என்பதை உணர்வார்கள்.


முருகன் அருள்தனை பெற்றிட ஜீவதயவே அடிப்படையாகும். அந்த ஜீவதயவை பெற அவன் ஜீவர்களாகிய உலக உயிர்களிடத்து அவன் எந்த அளவிற்கு அன்பு செலுத்துகின்றானோ எந்த அளவிற்கு பிற உயிர்கள்பால் இரக்கம் காட்டுகிறானோ அந்த அளவிற்கு அவ்வுயிர்கள் ஆசியால் ஜீவதயவு அவனுள்ளே தோன்றும் என்றும் அறிவார்கள்.


முருகனை வணங்க வணங்க ஜீவதயவின் தன்மையையும் அதை பெறுவது எப்படி என்பதும் ஜீவதயவை பெற தடைகள் எவை எவை என்பதையும் அறிவான் அந்த முருக பக்தன்.

Share on:
Today News