துன்பமில்லாமல் வாழ்வோம்

துன்பமில்லாமல் வாழ்வோம்

முன் ஜென்மத்தில் பலரை வஞ்சித்ததனால், இந்த ஜென்மத்தில் இரவு முழுவதும் தூங்காமல் நோயினால் துன்பத்தை அனுபவித்து கொண்டிருக்கிறான்.
நாம் எந்த அளவிற்கு இப்பொழுது துன்பத்தை அனுபவிக்கின்றோமோ, அந்த அளவிற்கு பிறருக்கு நாம் இடையூறு செய்திருக்கின்றோம் என்று அர்த்தம்.
நீ இப்பொழுது அனுபவிக்கின்ற துன்பங்கள் அனைத்தும், முன் ஜென்மத்தில் பல பேருக்கு செய்த துன்பத்தினால் வந்ததுதான். அந்த துன்பத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அது வறுமையாகவும், நோயாகவும் இன்னும் பலவாறாகவும் இருக்கும்.
தினமும் நாமஜெபம் செய்து ஞானிகளை வணங்கி “பாவம் செய்யாதிருக்க நீங்கள் அருள் செய்யவேண்டும்” என்று ஆசானை கேட்டு நெறிக்குட்பட்டு வாழ்ந்து துன்பமில்லாமல் வாழ்வோம்.
Share on:
Today News