நன்றி மறவாதே

நன்றி மறவாதே

திருக்குறள் –செய்ந்நன்றி அறிதல் – குறள் எண் 110.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்று சொல்லும்போது எந்த பாவத்தை செய்தாலும் அவனுக்கு ஒரு விடிமோட்சம் இருக்கும். அவன் தப்புவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும். ஆனால் செய்ந்நன்றி கொன்ற மக்களுக்கு, செய்த பாவத்திலிருந்து தப்பிக்க எந்தவிதமான வாய்ப்பும் இருக்காது.
அறிந்து செய்தாலும் பாவம், அறியாமல் செய்தாலும் பாவம். அறிந்து செய்தால் நூறு சதவீத பாவம் சூழும். அறியாமல் செய்தால் எழுபது சதவீத பாவம் சூழும். இப்படிப்பட்ட பாவம் போகவே போகாது என்கிறார் ஆசான் வள்ளுவப்பெருமான். யாராவது மனம் நொந்து, வெதும்பி பாவி, நன்றி மறந்து நமக்கு இப்படி செய்துவிட்டானே என்று நினைத்தால் நிச்சயமாக அவனை பாவம் சூழந்து கொள்ளும்.

Share on:
Today News