பஞ்சபூத விளக்கம்

பஞ்சபூத விளக்கம்

பஞ்சபூதங்கள் வெளியிலும் இருக்கிறது, உடம்பிலும் இருக்கிறது. பிருதிவியின் கூறு உடம்பில் எலும்பு, நரம்பு, தோல், தசையாகவும், தண்ணீரின் கூறு உதிரம், மஜ்ஜை, மூளை, நிணமாகவும் இருக்கும், எலும்பு, நரம்பு, தோல், தசை முழுவதும் மண்ணின் கூறாகவும், உள்ளே 98.4 டிகிரி வெப்பமாக இருப்பது சூரியன் கூறு என்றும், உள்ளே ஓடுகின்ற காற்று வாயுவின் கூறு ஆகும். பஞ்சபூதத்தைப் பற்றி அறிந்து தன்னை தோற்றுவித்த இயற்கையை வென்றவர்கள் ஞானிகள். இதுவே ஆசான் சுப்பிரமணியர் அறிந்த அறிவாகும். அவர்தான் இந்த இரகசியத்தை அறிந்தார்.
மூச்சுக்காற்று பஞ்சபூதாதிகளின் கூறுதான். வாயுவில் பஞ்சபூதமும் அடங்கியிருக்கிறது. மூச்சுக்காற்று அணுவாசலாகிய புருவமத்தியில் ஒடுங்கினால் பஞ்சபூதங்களும் அடங்கிவிடும்.
ஆசான் ஞானபண்டிதனை “ஓம் சரவண பவ” என்று நாமஜெபம் செய்து வணங்கி வந்தால், அந்த பஞ்சபூதங்கள் நம்முள் ஒடுங்கிவிடும். இதுவே மரணமிலாப் பெருவாழ்வு.

Share on:
Today News