பணிவே செம்மையான வாழ்வு

பணிவே செம்மையான வாழ்வு

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்

மாணாசெய் யாமை தலை.

 திருக்குறள்  இன்னா செய்யாமை  குறள் எண்  317.

மனதால் கூட பிறர் கெட்டுப்போக வேண்டும் என்று ஒருவன் நினைத்தால் ஆபத்து வரும். இந்தஎண்ண அலைகள் அவனைப் பாதிக்கும். ஆகவே மனதாலும் பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது என்பார்ஆசான் வள்ளுவப்பெருமான்.

ஞானிகளை பூஜை செய்யும்போது நமது இதயம் கனியும். இதயம் கனிய, கனியத்தான் மற்றஉயிர்கள்பால் கருணைக் கொண்டு வாழ முடியும். அப்பொழுதுதான் புலால் உண்ணுகின்ற பழக்கம்நீங்கும், உயிர்க்கொலை செய்வது பாவம் என்று எண்ணுகின்ற எண்ணம் உண்டாகும். ஞானிகளைவணங்க, வணங்க மற்றவர்களிடம் இனிமையாகப் பேசுவார்கள். மற்ற உயிர்களுக்கு மகிழ்ச்சியைஉண்டாக்குவதே, ஞானவாழ்விற்குத் துணையாக இருக்கும்.

ஞானிகளை தினந்தோறும் பூஜை செய்தால், பணிவால் செம்மையான வாழ்வை பெறலாம்,விரும்பியதெல்லாம் பெறலாம்.

Share on:
Today News