பூஜை

பூஜை

ஒரு மலரில் எப்படி நறுமணம் இருக்குமோ அதுபோல ஞானிகளைப் பற்றி சிந்திக்க சிந்திக்க சிந்திக்க நல்ல எண்ணங்கள் நம்மிடம் உருவாகும். இப்படி சிந்திக்க சிந்திக்க ஞானிகள் நம்முடைய சிந்தையில் சார்ந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட ஞானிகளின் திருவடிகளை சார்ந்தவர்கள்தான் உண்மையான சன்மார்க்கவாதி. ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி என்று சொல்வதுதான் பூஜை.

உடம்பைப் பற்றி அறிவது பாச ஞானம், உயிரைப் பற்றி அறிவது பசு ஞானம். இரண்டும் புருவமத்தியில் ஒடுங்கினால் நிச்சயம் ஒருவன் கடவுளாவான். இந்த இரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஞானிகளின் திருவடிகளை பூஜை செய்தவர்களுக்கு இந்த இரகசியம் புரியும். அவரவர்களும் ஞானிகளை பூஜை செய்து ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும்

Share on:
Today News