மகான் அருணகிரிநாதர் புகழ்மாலை

மகான் அருணகிரிநாதர் புகழ்மாலை

எல்லா ஜீவராசிகள் வாழ்வதற்கும் அடிப்படை ஆதாரமாக உள்ள காற்று எந்தவொரு உயிரிலும் ஒடுங்கவில்லை. ஆனால் முருகப்பெருமான், தான் தோன்றியது முதல் ஓரறிவு ஜீவன்முதல் ஆறறிவு ஜீவர்கள் வரை எல்லா உயிர்களிடத்தும் அளவிலாது அன்பு செலுத்தினன். ஆதலினால் எல்லா ஜீவராசிகளும் முருகனை வாழ்க வாழ்க என வாழ்த்த வாழ்த்த எவ்வுயிருக்கும் யாருக்கும் வசப்படாத ஒடுங்காத காற்று முருகனது ஜீவதயவிற்கு கட்டுப்பட்டு ஒடுங்கியது.

எல்லா உயிர்களின் ஆசியே முருகனுக்கு வாசியாக மாறி, வாசி லயப்பட காரணமாய் அமைந்தது.

முருகப்பெருமான்தான் ஒரு மனிதனுக்கு வாசி நடத்தி தரவல்ல தகுதியும், ஆற்றலும், அதிகாரமும் கொண்டவனாய் உள்ளான்.

முருகப்பெருமானின் திருவடிகளைப் பூசித்து ஆசிபெற்ற மக்கள் இனிபிறவா மார்க்கத்தை அடைவார்கள். இவ்வாறு முருகப்பெருமானை பூஜித்து வாசி வசப்பட்ட மகான் அருணகிரிநாதர், தமது அருட்கவியால் முருகப்பெருமான்தான் முக்திக்கும், ஞானத்திற்கும், இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் தலைவன் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியவர்.

Share on:
Today News