நம்முடைய உடம்பை பஞ்சபூதங்கள் தோற்றுவிக்கும் பொழுதே இப்படித்தான் தோற்றுவிக்கிறது. பெண்ணையும் ஆணையும் காமதேகத்தையும் சேர்த்தே தோற்றுவிக்கும். நம் உடம்பிற்குள்ளே நரகமும் இருக்கிறது, சொர்க்கமும் இருக்கிறது. காமதேகம் நீங்கினால் ஞானதேகம் தோன்றும். இதை அறிந்தவர் மகான் சுப்பிரமணியர். அவருடைய ஆசியைப் பெற்றால் நாமும் அதை அறியலாம்.