முக்திக்கு தலைவன் முருகனே பாகம் 2

முக்திக்கு தலைவன் முருகனே பாகம் 2

அன்னதானமும் பூஜையும் ஆன்ம லாபம் பெறுவதற்காக முருகப்பெருமானால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பிட்சையாகும். அந்த அருள் பிட்சை பெற்றிட்ட நாம், ஞானத்தில் வெகுதொலைவு சென்றதாக கற்பனை செய்யாமல் மேலும் மேலும் முருகன் திருவடியை பற்றிட வேண்டுமென்ற தன்னடக்கம் வேண்டும்.

இவற்றை நாம்தான் செய்தோம் என்று எண்ணாமல், முருகா உமது அருளால் சிறிது செய்தேன், என்னை ஏற்று அருள்புரிவாய். எமது பாவங்களையெல்லாம் ஒழித்து, உமது திருவடி பற்றிட அடியேன் எம்மை வழிநடத்துவாய் ஞானத்தலைவனே, முருகப்பெருமானே என்று வணங்க வேண்டும். இதற்கு ஆறுமுகன் அருளாலே, அவர் திருவடியைப் பற்ற முடியும். இதுவே முக்திக்கு தலைவன் முருகப்பெருமான் அருளைப் பெற உபாயமாகும்.

Share on:
Today News