முதல்நிலை யோகப்பயிற்சி 2

முதல்நிலை யோகப்பயிற்சி 2

மூச்சுக்காற்றே ஆன்மாவாகும். மூச்சுக்காற்றைப் பார்த்தால் ஆன்மாவைப் பார்ப்பதாக அர்த்தம். ஞானிகளின் திருவடிகளை வணங்கி அவர்களின் ஆசி பெற்று மூச்சுக்காற்றை வசப்படுத்த வேண்டும்.

ஆன்மா அல்லது மூச்சுக்காற்று பல லட்சம் கோடி ஜென்மங்களாக தொட முடியாத இந்த வாசியை, இந்த ஜென்மத்தில் ஆசான் இராமதேவர் அனுக்கிரகத்தால் கருணையால் தயவால் நமக்கு மூச்சுக்காற்றை தொடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீ நினைக்கும்போதே மூச்சுக்காற்று வேகமாக வந்துபோக ஆரம்பித்துவிடும். பிறந்ததிலிருந்து சாகும்வரை நம்மைப் பற்றி (மூச்சுக்காற்று) அறியாமல் இருந்தான். இதில் யாரோ ஒருவன் மூச்சுக்காற்றைப் பற்றி உபதேசித்திருக்கிறான்.

ஆகவே ஞானிகளின் ஆசியைப் பெற்றால்தான் அவர்கள் நம்முடைய புருவமத்தியில் ஒடுங்கி மூச்சுக்காற்றை ஒடுக்கி வாசிவசப்படச் செய்வார்கள்.

Share on:
Today News