முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

26 April 2020

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

பற்றின வினை மீண்டும் மீண்டும் தோன்றி தோன்றி ஆசை வலைக்குட்படுத்தி அவனை மயக்கத்தில் ஆழ்த்தி பேராசையை தூண்டி பாவியாக்கிக் கொண்டே வந்து தொடர் பிறவிக்கு காரணமாக்கி துன்பத்திலாழ்த்தி பழிவாங்குகிறது.
இப்படி பேராசையே பிறவிக்கு காரணமாக அமைவதை கண்டுபிடித்த முதல் ஞானவான் ஞானபண்டிதனாவார். அவரே பேராசை, பொறாமை, கடுங்கோபம், கொடுஞ்சொல் ஆகிய குற்றங்களை தெளிவுற உணர்ந்து பற்றற்ற நிலை நின்று பேராசை ஒழித்து கடைத்தேறினவன் ஆவான்.
பற்றற்றவன் துணையினால்தான் பேராசையை நாம் ஒழித்திட முடியும். அவனால்தான் பேராசையைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை முருகனருளால் உணர்ந்து அவன் தாள் போற்றிட முருகனருளால் பேராசை வென்று அவன் திருவடிக்கே ஆளாகி கடைத்தேறலாம்.
பற்றற்ற பரமன் முருகன் திருவடி பற்றுவோம்!
பற்றுகளை விட்டு முருகன் திருவடிக்கு அடைக்கலமாவோம்!!

Share on:
Today News