முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

27 April 2020

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

அன்னதானமும் பூஜையும் அவரவர் ஆன்மலாபத்திற்காக தன்னலமற்று பிரதிபலன் பாராது செய்கின்ற புனிதச் செயல்களாகும் என்றும், அவற்றை பிரதிபலன் கருதி செய்வதினாலே பலனில்லை என்ற உண்மையையும் உணரப்பெறுவார்கள்.
ஒரு மனிதன் காலை எழுந்து உடலில் உள்ள கழிவுகளை காலத்தே வெளியேற்றி பசித்தபோது உடல் வளர்க்க உணவினை உண்டு, உடல்தனை ஆரோக்கியம் கெடாமல் உடம்பிற்கு என்னென்ன வேண்டும்? எது நல்லது? எது கெட்டது? என்று பார்த்து பார்த்து செய்வது போலவே அவனது ஆன்மாவிற்கு என்ன செய்கின்றான் என்றால் ஒன்றுமில்லை.
உடல் காக்க ஏதேதோ செய்து செய்து காக்கும் அவன் அவனது ஆன்மாவிற்கு ஆக்கம் தருகின்றது எவை எவை என்றே தெரியாமல் வெகுபேர் தடுமாறுகின்றனர்.
முருகப்பெருமானை வணங்க வணங்க முருகன் அருள்கூடி அருள் பெறும் அன்பர்தாம் அவரவர் செய்த செயல்களிலே கர்வம் கொள்ளாது அவர்தம்மை ஆறுமுகன் காப்பான். உடல்காக்க உணவு உண்டு மருத்துவம் செய்வது என்ற பலவழிதனிலே உடலை காத்து வரும் மனிதன் ஆறுமுகனார் அருள்கூடிட பல ஞானிகளுக்கு அறிந்தோ அறியாமலோ செய்திட்ட தொண்டின் பலனினால் அவன்தன் ஆன்ம அறிவு தூண்டப்பட்டு உடல் வளர்த்தல் மட்டுமே வாழ்வன்று, உடம்பின்கண் உறையும் ஆன்மாவையும் ஆக்கம் பெறச் செய்ய வேண்டுமென்ற அருளுணர்வு மேலோங்கும்.
அவனின் அந்த அருளுணர்வு ஆறுமுகனாம் முருகப்பெருமான் அவனுக்களித்த அருள் பிட்சையாகும். அந்த அருள் பிட்சையே அவன் அவனது பிறப்பினிலே மனிதனாய் பிறந்ததின் பலன்தனை பெறும் பயனாம்.
அருள்பிட்சை பெற்றவன் உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும் வாழ்ந்து, உயிர்க்கொலை பாவத்திலிருந்து தப்பிக்கின்றானோ அதுவே அவன் தனக்கு ஆண்டவன் ஆறுமுகன் செய்கின்ற அளவிலாத கருணையாகும். பிறர் தமக்கு அன்னதானம் செய்திட வேண்டுமென்ற உணர்வே உயிர்க்கொலை தவிர்த்தால்தான் வரும். உயிர்க்கொலை தவிர்த்தது முருகனின் அருள்பிட்சை.

Share on:
Today News