முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

27 December 2019

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

தானமும் தவமும் செய்தாலன்றி உடம்பையும் உயிரையும், ஜீவான்மாவையும் பரமான்மாவையும் ஒன்று சேர்த்து இயற்கையை வெல்லும் மரணமில்லாப் பெருவாழ்வினை யாதொரு வழியிலும் கண்டிப்பாக அடைந்திட இயலாது என்றே உரைத்திட்ட ஆதித்தலைவன் முருகப்பெருமானின் அதியற்புத இரகசியமான மரணமில்லாப் பெருவாழ்வை பெறும் வழிமுறையினை யாவரும் அறிந்திடாமல் அவரவர்க்கு மனம்போன போக்கிலே சென்றுமே யாரிடம் பக்தி செலுத்துவது என்றே தெரியாது பலவாறாய் சிறுதெய்வங்கள் மீதும், செத்துப்போன வீரர்கள் மீதும் பதிவுகள் வைத்து பலகாலமாய் வீணில் காலம் கழித்து ஆழ்ந்த பக்தி கொண்டு பலனின்றி அழுந்தி போய் பக்தி என்ற பெயரினிலே உயிர்க்கொலை செய்து பாவங்களும் பலவாறாய் செய்து மீளா நரகத்தினுள் புதைகிறார்கள்.

யாரிடத்து பக்தி செலுத்த வேண்டும், ஞானமடைய எது தேவை? எவர் குருநாதர்? எது வழிமுறை? என்றெல்லாம் தெரியாமல் உள்ளனர் மக்கள். ஆதித்தலைவன் முருகப்பெருமானார் முதல் அவர் வழிவழி வந்த திருக்கூட்ட மரபினராம் ஞானிகள் வர்க்கத்தினராலன்றி அவர்கள் துணையின்றி ஞானத்தைப் பற்றி அறியவோ, ஞானம் உணரவோ, ஞானம் பயிலவோ, ஞானம் அடையவோ முடியாதென்பதைக் கூட உணராமல் அவர்கள் திருவடியைப் பற்றினாலன்றி கடைத்தேறிட இயலாதென்பதையும் அறியாமல் ஏதேதோ பக்தி என்ற பெயரினிலே செய்து வீணில் கழிகிறார்கள்.

Share on:
Today News