முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

28 December 2019

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

துன்பமில்லாது இறையருள் பெற்று வாழ அவரவரும் அரங்கமகா தேசிகர் காட்டும் வள்ளல் பெருமானாரால் உலகறியச் செய்ததும் ஆதித்தலைவன் முதல் அனைத்து ஞானிகளும் கடைப்பிடித்து கடைத்தேறியதுமான சன்மார்க்க வழிதனிலே உடனடியாக காலமுள்ளபோதே வாய்புள்ள போதே தவறாமல் உடன் வந்து கலந்து நெறிநின்று ஆறுமுகனார், அகத்தியர் முதல் இன்று வரை வழிவழி வந்த திருக்கூட்ட மரபினர் அடங்கிய உத்தமஞானம் பெற்றுயர்ந்து தம்மை பற்றினோர்க்கெல்லாம் ஞானமளித்து கடைத்தேற்றி காத்தருள்புரிகின்ற நன்றி மறவா ஞானக்குலமாம் நன்னெறி போதிக்கும் சத்திய குலமாம், கடைத்தேற்றவல்ல வல்லமை கொண்ட ஒரே குல வர்க்கமாம் ஞானியர் திருச்சபை கொண்ட நல்குலமாம் அகத்தியர் குலம்தனிலே சேர்ந்து அகத்தியர் குலம்தனை இக்கலியுகத்திலே அமைத்திட்ட ஆறுமுகனார் தலைமை கொண்டதும் அரங்கர் வாழும் ஞானஆலயமுமான ஓங்காரக்குடில்தனிலே ஞானிகள் அருளாசி பெற்ற உணவினை உண்டு வருகின்ற அவரவரும் அவரவர் எடையளவு தானியம்தனை (அரிசி), அவரவரும் ஞானம் அடைய, வாழ்வு வளம் பெற, செயல்களில் வெற்றி பெற, தடை நீங்க, துன்பம் நீங்க, வினை நீங்க என்றே ஆசானிடத்து வேண்டிக் கொண்டு சித்தர் கூட்டமாம் அகத்தியர் குலத்திற்கு ஓங்காரக்குடில்தனிலே அத்தானியத்தை தானமாக வழங்கி என்றும் மாறாத நிலைத்தன்மை உடைய ஆற்றல்மிகு கொண்ட ஞானிகள் திருவடிகளைப் பற்றி ஞானிகள் பூசைதனை அவரவர் வீடுகளிலே தவறாமல் தொடர்ந்து மனமுருகி செய்திட செய்திட செய்கின்ற அவரவர்க்கும் ஞானிகள் ஆசியோடு அரங்கன் ஆசியும் கூடி பூரண ஆசிதனை பெற்று தினந்தினம் பூசைகளிலே மேன்மேலும் வெற்றிகளைப் பெற்று முழுமையினைப் பெறுவார்கள். முழுமைப் பெற்று அவர்தாம் பெற்ற பிறவிப் பயனை அடைந்து கடைத்தேறுவார்கள்

Share on:
Today News