முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

29 December 2019

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

இக்கலியுகத்திலே இக்காலத்தே மக்களிடத்தே தனிமனித ஒழுக்கம் வளர்க்கவும், பக்தியினை ஊட்டவும், நன்னெறி புகட்டவும், ஜீவதயவினை ஊட்டி அதன்வழி நடத்திடவும், அளவிலா ஆற்றலும், தவசக்தியையும், யோகசக்தியையும் கொண்டுமே ஆதித்தலைவன் ஆறுமுகப்பெருமானாரே அவதாரமாக அரங்கமகா தேசிகர் வடிவினிலே ஞானிகள் புடைசூழ மனிதர்களாய் தோன்றிட என்றும் மாறா நிலை கொண்ட ஞானியாக மகா ஞான யோகியாக அவதரித்து மக்களை சமரச சுத்த சன்மார்க்க நெறிவழிதனிலே கொண்டு வந்து அவர்களையெல்லாம் ஞானிகள் கொண்ட திருச்சபையாம் அகத்தியர் குலம் சார்ந்திட செய்து மக்களை காத்து இரட்சித்திடவே ஓங்காரக்குடிலமைத்து எளிமையான அணுகுதற்கு எளிதாய், ஆற்றலில் மிகுந்து விரிவாய் விளங்கி அருளமுதாம் அன்னமிட்டு நோய் தீர்த்து வினை தீர்த்து அறியாமை போக்கி அறிவொளிகூட்டி அபயமளித்து துன்பம் போக்கி கருணை மிகக்கொண்டு காத்து ஞானவழி இவ்வுலகையே ஞானஆட்சி செய்கின்றார் உலக மகா ஞானயோகி ஞானஅரசன் அரங்கமகா தேசிகர். அவர்தாமே இன்றைய உலகின் இக்கலியுகத்தின் ஒரே உத்தம மகாஞான யோக சற்குருநாதனாவார். அவரே ஆறுமுகனார் அவதாரமாவார். ஆதலினால் அண்ணல் அரங்கர் வாழும் அறிவொளி ஞானஆலயமாய் ஞானம் அளிக்கவல்ல ஒரே ஞானசபையாம் அரங்கனின் வாழ்விடமாம் ஓங்காரக்குடில்தனை அவரவரும் உடன் நாடிச்சென்று மனதினிலே அய்யங்களும் குற்றஉணர்வுகளும் ஏதும் இன்றி ஆசான் அரங்கமகா தேசிகர் தம்மை கண்டு தேறிடுங்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு துன்பமில்லா இன்பமயமான அருள்வாழ்வை வளமான வாழ்வை அரங்கனாசியால் பெற்று வாழ்ந்திடுங்கள் மக்களே! நீங்களெல்லாம் கடைத்தேறிடவே சூட்சுமமாம் இரகசியம்தனை கடைத்தேறிட உள்ள இவ்வுலகின் ஒரே ஒரு மார்க்கமான இதனை உங்களுக்கு கூறுகிறேன் கண்டு தெளிவீர். ஆதலின் உலகமக்களெல்லாம் அரங்கனின் சுத்த சன்மார்க்கத்தில் கலந்து மாட்சிமை பொருந்திய குருராஜனாம் அரங்கமகாதேசிகர் தம்மை ஆசானாக, குருவாக, சற்குருவாக, சொற்குருவாக, ஞானகுருவாக, கடைத்தேற்றவல்ல ஒரே சக்தியாக ஏற்று பணிந்து வழிபட்டு போற்றி வாழ்ந்திட வாழ்கின்றவர் தமக்கு எல்லா வகையிலும் சிறப்புகள் கூடி வளமான வாழ்வை வாழ்வார், அற்புதங்கள் பல அவர் வாழ்வினிலே அடைவார் அவர்தம் வாழ்விலே தர்மங்கள் மிகுந்து செய்து தர்மவானாய் வாழ்வதோடு ஞானிகளை பூசித்து ஞானவானாயும் வாழ்வார்கள்.

Share on:
Today News