முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

30 December 2019

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

பாவவினை நீங்கி நலம்பெறவும் ஞானம் பெறவும் விரும்பும் அவரவரும் உலகமகா ஞானயோகி ஆறுமுகனார் அவதாரம் அண்ணல் அரங்கமகாதேசிகர் வாழும் ஓங்காரக்குடில்தனை நாடி விரும்பிச் சென்று அய்யமற குடில்தனிலே அரங்கர் தவம் செய்திட்ட இடமாம் தவக்குடில்தனிலே அமர்ந்து தியானங்கள் செய்து அதன் பின்னே அவரவர் எடை அளவு தானியங்களை (அரிசி) தருமமாக ஆங்கே நடக்கின்ற அன்னதானப் பணிக்கு அளித்து மனம் மகிழ, பயபக்தியுடன், பணிந்து, ஆசான் அரங்கர் திருவடி பணிந்து வணங்கி, அரங்கரிடத்து இணையற்ற மகாமந்திரமான “ஓம் சரவண பவ” எனும் ஆதிமூல மகாமந்திரத்தை அரங்கர் மூலமாக மகாமந்திர தீட்சை உபதேசமாகப் பெற்றும் ஞானிகள் நாமங்களையும் மந்திரஉபதேசமாக பெற்றும் ஞானிகள் தம்மை பூசித்து அவரவரைப் பற்றிய தடைகளும் துன்பங்களும் விலகிடவே தினம்தினம் மறவாமல் தொடர்ந்து ஞானிகள் பூசைதனை செய்து வருதல் வேண்டும்.

ஞானிகள் பூசைதனையும் மகாமந்திர ஜெபமும் செய்துவர செய்துவர ஆசான் உபதேசவழி தடையின்றி நடந்திடலாம். ஆசான் உபதேசவழி நடந்திடவும் செபதபங்களை தொடர்ந்து செய்துவர செய்துவர செய்கின்ற அவரவர்க்கும் ஞானிகள் மனமகிழ்ச்சியால் குருஅருளாம் அரங்கனருள் கூடி குருவருளுடன் திருவருளாம் சண்முகனின் அருளாசியும் கூடி இவ்வுலகினிலே எல்லா வளமும் பெறுவார்கள்.

Share on:
Today News