முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்….

15 September 2021

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்….

எல்லாம் வல்ல இயற்கை உயிர்களை தோற்றுவிக்கும் போதே அதனுள் ஒருவித மயக்கத்தை வைத்தே படைத்துள்ளது. அது தேகத்தினுள் தங்கிய கசடாக உள்ளது. அந்த மயக்கமே நித்தியத்தை அநித்தியம் என்றும், அநித்தியத்தை நித்தியமென்றும் நம்பி மயங்குகிறது.
அசுத்த தேகத்திலுள்ள தேகக்கசடை நீக்கி விட்டால் சுத்த தேகமாகும். சுத்த தேகம் அசுத்தமாகிய மயக்கம் நீங்க பெற்றதால் நித்தியத்தை நித்தியமாக உணர்ந்து அநித்தியத்தையும் நித்தியமாக ஆக்கிக் கொள்ளும்.
இவ்விதம் இயற்கையின் மயக்கம் நம்முள் நீங்கிட, தேகக்கசடு நீங்கிட வேண்டும். நமது உடம்பில் கசடு உள்ளதையும், அதை நீக்கிய முருகனே நமக்கு துணை என்பதையும் உணர்த்தி அசுத்த தேகத்தை சுத்த தேகமாக்கி என்றும் அழிவில்லாத பரமானந்த நித்திய நிலைதனை அருள்வான் முருகப்பெருமான் என்பதையும் உணரலாம்.
Share on:
Today News