முருகா என்றால்

முருகா என்றால்

சித்தரிஷி கணங்களின் தலைவன் மகான் அகத்திய பெருமானாருக்கும் நவகோடி சித்தரிஷிகணங்களுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததும் அவர்களையெல்லாம் மும்மலக்குற்றம் நீக்கி அவர் தம்மை தவம் செய்திட செய்து உடல் மாசு உயிர் மாசுநீக்கி அவர்களையெல்லாம் அருட்சோதி வடிவினர்களாக்கி அவர்களையும் தம்மைப்போல் ஆக்கிக் கொண்டவன் முருகப்பெருமானே என்று அறியலாம்.

முருகா முருகா என்றே செபித்திட செபித்திட, செபிக்கின்ற அவர் தமக்கு முருகன் அருள் கூடி தவமும் தவத்திற்குரிய அறிவையும் பெற்று அவனருளாலே அனைத்தும் அமையப்பெற்று சித்தி முக்தி பெறலாம்.

காலனைக் கண்டு கலங்காது இருந்திட

வேலனைப் போற்றுவோம் வாரீர்

வேலனைப் போற்றுவோம் வாரீர்.

Share on:
Today News