முருகா என்றால்…

முருகா என்றால்…

தமிழ் கடவுளான முருகப்பெருமானை உளமார வணங்கி போற்றுகின்றவர்களுக்கு,

துஷ்ட ஜந்துக்களாலும், விஷ ஜந்துக்களாலும் எந்த இடையூறும் வராது என்றும் அவற்றினால் எக்காலத்தும் ஆபத்துக்கள் இல்லையென்றும் உணர்ந்து தெளிவார்கள்.

தீவிரவாதிகளாலும், பகைவர்களாலும் முருகனை வணங்குபவர் தமக்கு இடையூறுகள் வராது என்றும் உணர்வார்கள்.

பண்புள்ளவர்களுக்கு இடையூறுகள் செய்கின்ற அசுரகுணம் கொண்ட மக்களாகிய பண்பற்ற அசுரர்கள் எல்லாம், முருகனை வணங்குகின்ற மக்களின் நிழலைக் கூட தொடமுடியாது என்பதையும் உணர்வார்கள்.

சமூக விரோதிகளாகிய அசுரர்கள், அதையும் மீறி பண்புள்ளோர் தம்மை தொட்டால் தொடுகின்ற அக்கணமே முருகனின் வேற்படைத் தாக்குதலுக்கு உள்ளாகி பொடிபட்டு போவார்கள் என்ற உண்மையையும் உளமார உணர்வார்கள்.

போற்றுவோம் முதற்கடவுள் முருகப்பெருமான் திருவடியை! பெறுவோம் சமூக விரோதிகளுக்கு அஞ்சாத வாழ்வை!!

Share on:
Today News