முருகா என்றால் “சிறிதளவேனும் கருணை இல்லாமல் உயிர்க்கொலை செய்வதும் அதன் புலாலை சுவைத்து உண்பதும் நரகத்திற்கு நம்மை இட்டு செல்லும் என்பதை அறியலாம். அறிந்தபின் பசித்த ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் இந்த வன்மத்திலிருந்து விடுபடலாம் என்பதையும் அறியலாம். மனிதனை ஞானியாக்கிடும் ஜீவதயவினை தம்முள் பெற்றிட்ட ஜீவதயவின் தலைவன் முருகப்பெருமான் நாமத்தை சொன்னால் போதும். முருகநாமம் ஒலித்த அக்கணமே சொன்னவர் மனிதனுள் ஜீவதயவுதானே தோன்றிடும்.