விதியை வெல்லும் பக்தி

விதியை வெல்லும் பக்தி

ஓம் ஆறுமுக அரங்க மகா தேசிகாய நமக….

இளமையும், நல்ல சுற்றுப்புற சூழல் இருக்கும்பொழுதே தினமும் பத்து நிமிடங்கள் ஞானிகள் நாமத்தை தியானம் செய்ய வேண்டும். பொருள் இருக்கும்பொழுதே தானமும், தர்மமும் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். நம் உடலை விட்டு உயிர் பிரியும்போது, நல்வினை தீயவினை ஆன்மாவோடு செல்லும்.

நம்முடைய விதியை மாற்றியமைக்க ஞானிகளுக்குத் தெரியும். அதற்கு ஞானிகளின் திருவடியைப் பற்ற வேண்டும். எனவே ஞானிகள் மீது பக்தி செலுத்தியும், தர்மம் செய்தும் வந்தால் நம்முடைய விதியை ஞானிகள் மாற்றுவார்கள்.

Contact Book Stall: +919095633344

Share on:
Today News