Author Archive

மகான் பிங்களமுனிவர் அருளிய ஒளி சூட்சும நூல்

Posted on: October 5th, 2018 by Agathiar No Comments

ஆலய வழிபாடு

Posted on: October 4th, 2018 by Agathiar No Comments

அறிந்தவருக்கு இந்த தேகம் அமிழ்தமாகவும், ஆலயமாகவும் இருக்கிறது. அறியாதவனுக்கு இந்த தேகம் நரகமாக இருக்கிறது. எல்லாம்வல்ல இயற்கையின் துணை கொண்டே ஞானிகள் கடவுள் தன்மையை அடைந்தார்கள். கடவுளை அடைவதற்கு தனித்தன்மை கிடையாது, தனிப்பொருள் என்ற ஒன்று அங்கே கிடையாது. இதே இயற்கை, இதே உணவு, இதே உடற்கூறு, மூச்சுக்காற்றுதான் இயங்கிக் கொண்டுள்ளது. ஆனால் இதே இயற்கையை கொண்டு ஞானிகள் கடவுள் ஆகிறார்கள். ஞானிகள் உடம்பே ஆலயமாக மாறியதால் பேரின்பத்தை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மைகளையும், இயற்கையையும் அறியாமல் நாம் மாண்டு போகிறோம். உள்ளமே பெருங்கோவில்! ஊனுடம்பே ஆலயம்!!

மகான் பாம்பாட்டிச்சித்தர் அருளிய ஒளி சூட்சும நூல்

Posted on: October 4th, 2018 by Agathiar No Comments

எது ஆன்மீகம்?

Posted on: October 3rd, 2018 by Agathiar No Comments

பசியாற்றக்கூடிய எண்ணம் எங்கிருக்கிறதோ? அது அறம். அந்த சிந்தனையே கடவுள் வாழுகின்ற இடம். பிறருக்கு பசியாற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலே அங்கே கடவுள் இருக்கிறான். கடவுளை எங்கேயும் தேடிப்போக வேண்டியதில்லை. தூயமனம் உள்ளவனே கடவுள். உண்மைப் பொருளுணர்ந்தவன் எந்த அளவுக்கு பிறர் மகிழ நடந்து கொள்கின்றானோ? அதுவே அறம், அதுவே தவம், அதுவே ஞானம், அதுவே முக்தி. அதுவே உண்மை ஆன்மீகம்.

மகான் பராசரிஷி அருளிய ஒளி சூட்சும நூல்

Posted on: October 3rd, 2018 by Agathiar No Comments
Today News