News
OCTOBER 2023
 
          குரு உபதேசம் – 3839
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகப்பெருமானின் கருணையில்லாமல், அருள் இல்லாமல், ஆசி இல்லாமல், அவனது துணை இல்லாமல் சத்தியமாக மனிதபிறவியின் துயரம் நீங்காது. நீங்கா துன்பமாகிய பிறவித் துன்பத்திலிருந்து விடுபட முடியாது என்பதும், முருகனது கருணையை முழுமையாக பெற்றால் மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்பதையும் அறியலாம்.
 
         
								 
								





 
															 
															