News
APRIL 2025

குரு உபதேசம் 4374
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகப்பெருமானின் திருவடிகளை உலக மக்கள் எந்த அளவிற்கு வணங்குகிறார்களோ, முருகப்பெருமான் தலைமையை எந்த அளவிற்கு மக்கள் விரைவில் ஏற்கிறார்களோ, முருகப்பெருமானை ஞான ஆட்சி அமைக்க எந்த அளவிற்கு மக்கள் மனம் உருகி அழைக்கின்றார்களோ, அந்த அளவிற்கு முருகப்பெருமான் விரைந்து வெளிப்பட்டு இவ்வுலகினில் ஞானியர் கூட்டம் புடைசூழ தேவாதி தேவரெல்லாம் ஒன்றுகூடிய ஞான ஆட்சியை இவ்வுலகினில் அமைப்பான் என்பதை உணரலாம்.
உலக மக்களே! அழையுங்கள் ஆறுமுகனை ஆட்சி அமைக்க.
உலக மக்களே! நம்புங்கள் ஞான ஆட்சி அமையுமென்று.
உலக மக்களே! மாற்றம் காண விரும்புங்கள் மனித ஆட்சி முடிந்து ஞான ஆட்சி அமைய.
உலக மக்களே! வணங்குங்கள் முருகனது திருவடிகளை.
உலக மக்களே! போற்றுங்கள் ஞானியர் திருவடிகளை.
உலக மக்களே! கலியுகம் முடித்து ஞானயுகம் அமைக்க நாடுங்கள் ஏழாம் படை வீடாம் ஓங்காரக்குடிலை.
உலக மக்களே! துன்பம் தீர்ந்து இன்பமான இறையாட்சி மலர பாடுபடுங்கள்.
உலக மக்களே! உலகம் நலம் பெற உடன் விரைந்து வாருங்கள் குடிலிற்கு.
ஒன்றுபடுவோம், பாடுபடுவோம், ஞானபண்டிதன் ஞான ஆட்சி உலகினில் அமைய ஞானபண்டிதனை மனமுருகி அழைப்போம், எல்லா உயிரும் இன்புற்று வாழும் ஞானஆட்சி அமைத்து பயன்பெறுவோம்.
வாழ்க சன்மார்க்கம்! வளர்க முருகன் அருள்!
வாழ்க சரவணஜோதி! வளர்க ஞான ஆட்சி!
ஒழியட்டும் மனிதர்கள் ஆட்சி! மலரட்டும் ஞானிகள் ஆட்சி!
……………..
திட்பமாம் முருகனின் திருவடி போற்றிட
நுட்பமாம் ஞானமும் நொடியில் சித்தியே.
