News
APRIL 2025

குரு உபதேசம் 4377
முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் அற்புதமான ஒரு சொர்க்கமயமான ஆட்சியாக மாறுகின்ற ஞானசித்தர்கள் ஆட்சியிலே, பருவமழை தவறாது பெய்து உலகெங்கும் செழிக்கின்ற ஆட்சியிலே, சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம், சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்றும் எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக எண்ணும் பொதுநிலை ஆட்சியிலே எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழும் அற்புத வாழ்வினை வாழ்கின்றதானதும் இதுவரை இந்த பூவுலகமே காணாத ஒரு அதிசய அற்புத ஞான ஆட்சியிலே பங்கு பெறுகின்ற வாய்ப்பை முருகனை வணங்க வணங்க வணங்குவோர்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்து முருகனை வணங்கி ஞான ஆட்சியிலே பங்குபெறுகின்ற, தொண்டு செய்கின்ற வாய்ப்பையும் பெறலாம்.
……………..
வள்ளி மணாளனை வாழ்த்தி வணங்கிட
எள்ளளவும் இடரில்லை இன்பம் உண்டாம்.
