News
MAY 2025

குரு உபதேசம் 4388
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
சமதர்ம நாயகன் முருகப்பெருமானின் ஆட்சி வெகுவிரைவில் வருவதை அறியலாம்.
சமதர்ம ஆட்சியில் தொண்டுகள் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்வதோடு, முருகனின் திருநாமங்களை “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ தினம்தினம் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடமும் தவறாது பூஜைகள் செய்தும் மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றிவித்தும் வருவதோடு மனிதர்களிடையே பாகுபாடுகளை காணாது சாதி, மத, இன, மொழி பேதங்களை துறந்து ஒன்றுபட்ட மனித சமுதாயம் அமைய முருகனது அருளைப் பெற வேண்டுமென்பதையும் உணரலாம்.
சக்கரவர்த்தி தவராஜ சிங்கமாம் முருகப்பெருமான்
மக்களைக் காக்க மகத்துவம் உண்டாம்.
வருவான் வடிவேலன் வையகம் காக்க
தருவான் பேரின்பம் தன்அடியவர்க்கே.
