News
JUNE 2025

குரு உபதேசம் 4435
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்….
நவகோடி சித்தரிஷிகணங்களுக்கு தலைவனாய், முப்பத்து முக்கோடி தேவரிஷிகளுக்கும் தலைவனாய், நவகிரக நாயகர் தலைவனாய், மும்மூர்த்திகளுக்கும் மேலாய், சப்தரிஷிகளுக்கும் தலைவனாய், அஷ்டதிக்கு பாலகர்களுக்கும் தலைவனாய், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிமார்களுக்கும், பதினான்கு லட்ச தேவர்களுக்கும் தலைவனாய் விளங்கி நின்று அருட்பேராற்றலாய் சதகோடி சூரியபிரகாசத்துடன் உலக உயிர்களிடத்தெல்லாம் நீக்கமற நிறைந்து நிற்கின்றவனும் மும்மூர்த்திகளுக்கும் எட்டாத முருகப்பெருமான் கலியுகத்தின் கொடுமைகளைக் கண்டு தானே நேரில் அவதாரமாக தோன்றி மனித ரூபத்திலே இவ்வுலகினில் வருகை தந்து உலகப்பெருமாற்றத்தை ஏற்படுத்தி இவ்வுலகை ஆட்சி செய்வான் என்பதை அறியலாம்.
