News
AUGUST 2025

குரு உபதேசம் 4479
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்….
அறம், பொருள், இன்பம், வீடுபேற்றிற்கு தலைவனான முருகப்பெருமான் திருவடிகளை பூஜிக்க பூஜிக்க இளமை நிலையாமை, உடம்பு நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை அறியச்செய்தும் இதற்கு காரணமாய் இருக்கக்கூடிய தூல தேகத்தையும், சூட்சும தேகத்தையும் அறியச்செய்து அதாவது புறஉடம்பையும், அகஉடம்பையும் அறியச் செய்து, தூல தேகத்தினில் உள்ள காமவிகாரத்தை நீத்து போகச்செய்து சூட்சும தேகமாகிய ஒளிதேகத்தை பெற அருள்செய்வான் முருகன் என்பதையும் அறியலாம்.
……………….
வித்தகன் முருகனை விரும்பியே போற்றிட
சத்தும் சித்தும் கைவசமாமே.
ஆகுமே சித்து அனைத்தும் சித்திக்கும்
வேகுமே வினைகள் வெந்தே வீழுமே!
