News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4518
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
அகத்தீசனை பூஜை செய்ய செய்ய மனம் உருதி பூஜிக்க பூஜிக்க தயவே யோக ஞானத்தை அடையும் சாதனம் என்பதை உணர்த்துவார். தயவை பெறுவதற்கான வழிமுறைகளையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உண்டாக்கித் தருவார். தம் சித்தர் கணங்களுடனே மகான் அகத்தியர் சிறு தயவினை தர்மத்தினை செய்ய வாய்ப்பளித்து அந்த சிறுதயவாகிய தர்மத்தினால் உலக உயிர்களுக்கு உபகாரம் செய்ய வாய்ப்பளித்து தர்மத்தினால் மகிழும் உயிர்களின் ஆசியின் துணையால் மேலும் தயவைப் பெருக்கி, பெருகிய தயவின் துணையால் மேலும் தயவைப் பெருக்கி இப்படி தயவினைப் பெருக்கி பெருக்கி வரவர, தயவின் சக்தி பெருக பெருக, தயவு பெருகும் அன்பர்தம், சிந்தை தெளிவாகி தூய அறிவு உண்டாகும். அறிவு தெளிவடைய தெளிவடைய அந்த அறிவு தயவினால்தான் உண்டாக்கப்படுகிறது என்பதையும் உணரச் செய்வார். அகத்தியர் தயவு பெருக பெருக, அறிவும் பெருகி பெருகி, யோகம் ஞானம் அறியும் அறிவாக மாறி, தயவே வடிவான முருகனது திருவடியைப் பற்றினால்தான் யோக ஞானம் சாத்தியம் என்பதையும் உணர்த்த உணர்வார்கள். சாதகன் அகத்தியர் கருணையாலே யோக ஞானத் தலைவனிடத்து தயவுடையோர் மட்டுமே புண்ணியம் செய்த புண்ணியவான்களுக்கு மட்டுமே, யோகம் அறியும் வாய்ப்பும் ஞானம் அறியும் வாய்ப்பும் உண்டாகும் என்பதையும் உணர்த்துவார்.
