News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4520
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
தாய்தந்தையின் காமத்தால் உருவான இந்த காமதேகத்தில் உள்ள கசடாகிய மும்மலக் குற்றம் நீங்க வேண்டுமெனில் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானின் ஆசி இல்லாமல் ஒருகாலும் முடியாது என்பதும், முருகனே வாசியோடு வாசியாக சாதகனை சார்ந்து வாசி நடத்திக் கொடுத்து இத்தேக கசடை நீக்கினால் அன்றி தேகக்கசடை நீக்கவோ, நீக்கி ஞானம் அடையவோ முடியாது என்பதையும் முருகனது அருளை ஆசியை பெற வழிமுறைகளை உபதேசிப்பார் மகான் அகத்திய பெருமான்.
