News
NOVEMBER 2025
குரு உபதேசம் 4582
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றால்:
மும்மலமாகிய சிறையை உடைத்து மும்மலச்சிறையில் அடைப்பட்ட ஆன்மாவை விடுவித்து சித்தி பெறலாம் என்பதும், அந்த மும்மலச் சிறையை உடைத்தெறியும் வல்லவன் முருகனே என்றும் முருகப்பெருமானால்தான் மும்மலச் சிறையை உடைத்து சிறைப்பட்ட ஆன்மாவை விடுவித்து கடைத்தேற்ற முடியுமென்றும் அறியலாம்.
வல்லவன் முருகனை வாழ்த்துவோம்
எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.
ஆற்றலாம் முருகனின் அருளை தினமும்
போற்றியே மகிழ்வர் புண்ணியரே.
மணிவாசகப் பெருமானை மகிழப் பூஜித்தால்
கனிவான சித்தியை காண்பார் உண்மையே.
வள்ளல் பெருமானை வாழ்த்தி வணங்குவோம்
எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம்.


