News
NOVEMBER 2025
குரு உபதேசம் 4595
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
தோன்றிய உயிர்கள் இறுதியில் முற்றுப்பெறுவதற்கு ஒரே வாய்ப்பு மனிததேகம் மட்டுமே. கடவுள் தன்மை அடையவே இயற்கை கடவுளால் உண்டாக்கப்பட்டதே மனிதப் பிறப்பாகும். அப்படி பல்லாயிரங்கோடி ஆண்டுகள் தவமாய் தவமிருந்து பெற்ற மானுட பிறப்பின் மகத்துவம் புரிந்து கொள்ளாமல் வாழ்வினை வீணாக்கி விடக்கூடாது.


