News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 15
- சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுத்த சன்மார்க்க சுகத் தனிவெளி எனும்
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !
சிற்சபை என்பது ஞானத்தின் ஊற்றுக்கண்ணாகும். உயிர்களின் உள்ளத்தில் ஞானம் பிரகாசிக்கும் இடமே சிற்சபையாகும். இந்த சிற்சபையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வீற்றிருக்கும் சபையாகும்.
தூய சத்தினால் கிடைக்கக்கூடிய பேரானந்த நிலையே ஞான நிலையாகும். மகான் வள்ளலார் வழிவகுத்த சுத்த சன்மார்க்கம் இந்த நிலைக்கு அழைத்து செல்லும் பாதையாகும்.


