News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் 18
18. ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
ஞான யோகாந்த நடத் திரு வெளியெனும்
ஆனி இல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !
யோகாந்தம் : யோகத்தின் முடிவு ( யோகம் + அந்தம் )
ஆனி இல் – குற்றமற்ற
ஞான யோகத்தின் எல்லையாக இறைவன் திருநடனம் புரியும் தூய வெளியாகவும், எவ்விதக் குறையும் அற்ற ஞானசபையாகவும் விளங்கும் அருள்மயமான ஆண்டவரே !


