தினம் ஒரு அகவல் 29
29. வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
வேத ஆகமங்களின் விளைவுகட்கு எல்லாம்
ஆதாரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி !
வேதங்கள், ஆகமங்கள் போன்றவற்றில் உள்ள ஞான உபதேசங்களுக்கும், வழிகாட்டுதலுக்கும் ஆதாரமான ஞான வெளியில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதி !