தினம் ஒரு அகவல் 30
30. என்றா தியசுடர்க் கியனிலை யாயது
வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது
அன்றாம் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி !
என்றுமே ஆதியாக மூலமாக இருக்கும் பேரொளியாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஞானத் திருச்சபையில் வீற்றிருக்கிறார்.