தினம் ஒரு அகவல் 34
35. எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
எவ்வகைச் சுகங்களும் இனிது உற அளித்து அருள்
அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !
எல்லா வகையான இன்பங்களையும் இனிமையுடன் தந்து அருள்புரியும் சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!