News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 41
41. மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம்
அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் போன்ற எந்த அறிவுக் கருவிகளுக்கும் எட்டாததும், அனைத்து மதக் கொள்கைகளையும் தாண்டி நிற்கும் நிலையான நித்திய வெளியில், காலத்தால் அழியாத ஞான ஒளியாக வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


