News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 43
43. வாரமு மழியா வரமுந் தருந்திரு
வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
வாரமும் அழியா வரமும் தரும்
திரு ஆரமுதாம் சபை அருட்பெருஞ்ஜோதி !
வாரம் என்பது பக்தி / பக்தர் என்று பொருள்படும். தன்மீது பக்தி கொண்டு நாடி வருகின்ற பக்தர்களுக்கு, காலத்தால் அழியாத மரணமிலாப் பெருவாழ்வு என்னும் வரத்தை அளிக்கும் திருவருள் நிறைந்தவரும், அடியவர்களுக்கு அமுதமாக விளங்கும் சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


