News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 48
48. எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி
எம்பலம் எனத் தொழுது ஏத்தினோர்க்கு அருள்புரி
அம்பலத்து ஆடல் செய் அருட்பெருஞ்ஜோதி !
“அருட்பெருஞ்ஜோதியே” “என் ஒரே அடைக்கலம்” என்று மனதாரத் தொழுது, போற்றிப் பாடும் அடியவர்களுக்கு உடனே அருள் செய்கின்றவரும், எல்லோரும் காணும்படி அம்பலத்தில் ஆனந்த நடனம் ஆடுகின்றவருமான அருட்பெருஞ்ஜோதியே!


