News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 53
53. கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
கற்பனை முழுவதும் கடந்த ஒளிதரும் ஓர்
அற்புதச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !
கற்பனைக்கு அப்பாற்பட்டதும், சுட்டிக் காட்ட முடியாத எல்லைகளை கடந்து தாண்டி நிற்கின்றதும், தன்னைத் தானே வெளிப்படுத்திக் கருணை ஒளியை வழங்குகின்றவரும், அதிசயங்கள் நிறைந்த ஞானமயமான சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


