News
MARCH 2026
3rd March 2026
தினம் ஒரு அகவல் 54
54. ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
ஈன்ற நல் தாயினும் இனிய பெருந்தயவு
ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !
ஆன்ற – நிறைவடைந்த
உயிரைப் பெற்றெடுத்த நல்ல தாயை விடவும், பேரன்பு கொண்டதாய்த் திகழ்கின்றவரும், நிறைவடைந்த ஞானச் சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


